இலங்கை

இலங்கையில் சமூக வலைத்தள பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை

இலங்கையில் விகாரைகளில் இடம்பெறும் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்களை சமூகத்திற்கு தேவையில்லாமல் பிரசாரம் செய்யும் தரப்பினருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன இதனை தெரிவித்துள்ளார்.

கடுவெல, நவகமுவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தாம் அறிந்தவுடன் பொலிஸாருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்ததாகவும், பொலிஸார் விரைந்து செயற்பட்டு சந்தேக நபர்களை கைது செய்ததாகவும் விதானபத்திரன தெரிவித்தார்.

அந்த சம்பவத்தில் பிக்குவின் நடத்தை மற்றும் பிக்கு உட்பட இரு பெண்கள் வெளி தரப்பினரால் தாக்கப்பட்டமை தவறானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சம்பவங்களை சமூக வலைத்தளங்கள் மற்றும் ஏனைய ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்துவது பிரச்சினையாக மாறியுள்ளதாக தெரிவித்த அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன, ஏனைய பிக்குகளும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிட்டார்.

நவகமுவ பிரதேசத்தில் உள்ள விகாரையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் தீர்மானம் எடுக்க வேண்டுமெனவும், அந்த விடயத்தில் புத்த சாசன அமைச்சு தலையிடாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 17 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்