சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவர்களுக்கு வாக்குரிமை: ஜெனீவா மாகாணத்தில் வாக்கெடுப்பு
வெளிநாட்டவர்களுக்கு வாக்குரிமை, வெளிநாட்டவர்கள் தேர்தலில் போட்டியிடுதல் போன்ற பல்வேறு விடயங்களை முடிவு செய்ய நேற்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வாக்கெடுப்பில், சுவிஸ் மக்கள் மீண்டும் வெளிநாட்டவர்களுக்கு வாக்குரிமை வழங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வாக்காளர்களில் 61 சதவிகிதம்பேர், வெளிநாட்டவர்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கு எதிராக வாக்களித்துள்ளார்கள்.46 சதவீத வாக்குகள் பதிவாகின.
அரசியலமைப்பு திருத்தத்தின் நோக்கம் ஜெனீவாவில் வசிக்கும் மற்றும் சுவிட்சர்லாந்தில் குறைந்த பட்சம் எட்டு ஆண்டுகள் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு நகரசபை மற்றும் மாநில மட்டத்தில் முழு அரசியல் உரிமைகளை வழங்குவதாகும். இது வெளிநாட்டினருக்கு நகராட்சி மட்டத்தில் தேர்தலில் நிற்கும் உரிமையை வழங்கியிருக்கும், அத்துடன் சுவிட்சர்லாந்தில் முதன்முறையாக கன்டோனல் மட்டத்தில் வாக்களிக்கும் மற்றும் தேர்தலில் நிற்கும் உரிமையையும் வழங்கியிருக்கும்.