ஐரோப்பா

ஐஸ்லாந்தில் குமுறத் தொடங்கிய எரிமலை – வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றம்

ஐஸ்லாந்தின் தென்மேற்கில் எரிமலை வெடித்துக் குழம்பைக் கக்கியுள்ளதால், பொது மக்களை அதிகாரிகள் வெளியேற்றினர்.

அடுத்த சில மணிநேரத்தில் எரிமலை வெடித்தது. நெருப்புப் பொறிகளும் புகையும் எழும்பிக் காற்றில் கலந்தன.

அருகிலுள்ள கிரிண்டவிக் நகரில் சுமார் 40 வீடுகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

அதிக குடியிருப்பாளர்கள் நிறைந்த ரெய்கனஸ் வளைகுடாவில், 800 ஆண்டுகள் அமைதியாக இருந்த அந்த எரிமலை சென்ற ஆண்டு குமுறத் தொடங்கியபோது பெரும்பாலோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

வடக்கு அட்லாண்டிக்கில் எரிமலைகள் அதிகமாக இருக்கும் பகுதியில் ஐஸ்லாந்து அமைந்துள்ளது.

இதற்குமுன் 2010ஆம் ஆண்டு எரிமலை வெடித்தபோது அட்லாண்டிக் நாடுகளுக்கிடையிலான விமானச் சேவைகள் மாதக்கணக்கில் பாதிக்கப்பட்டன.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!