இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை – விமான சேவைகள் இரத்து

இந்தோனேசியாவின் கிழக்கு நுஸா தெங்காரா மாகாணத்தின் ஃப்ளோரஸ் தீவில் உள்ள லெவோடோபி லகி லகி எனும் எரிமலை வெடித்துள்ளமையால் அங்குள்ள விமான நிலையத்தில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

மூன்று முறை இந்த எரிமலை வெடித்துள்ளதாகவும், அதில் இருந்து சுமார் 26 ஆயிரம் அடி தூரத்துக்கு தீக்குழம்புகள் வெளியேறி வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கின்றன.

எனவே அவுஸ்திரேலியா-இந்தோனேசியா இடையே செல்லும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

மேலும் அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!