செய்தி

இந்தோனேசியாவை உலுக்கிய எரிமலை குமுறல் – விமானச் சேவைகள் இரத்து

இந்தோனேசியாவில் லெவோடொபி லகி-லகி (Lewotobi Laki-Laki) எரிமலை மிகப்பெரிய அளவில் குமுற ஆரம்பித்துள்ளது.

இந்த சம்பவத்தைக் கருத்தில்கொண்டு பாலி தீவுக்குச் செல்லவிருந்த அல்லது அங்கிருந்து புறப்படவிருந்த குறைந்தது 24 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Jetstar, Virgin Australia, Air India, Air New Zealand, Scoot, Juneyao Airlines போன்ற விமானச் சேவைகள் அதில் அடங்கும்.

கிழக்கு நூசா தெங்காரா மாநிலத்தில் இருக்கும் லெவோடொபி லகி-லகி எரிமலை 11 கிலோமீட்டர் உயரத்துக்குச் சாம்பலும் புகையும் கக்கியதாக இந்தோனேசிய எரிமலை ஆய்வுத்துறை தெரிவித்திருந்தது.

சம்பவத்தின் தொடர்பில் பொருட்சேதம், உயிர்ச்சேதம் குறித்து எந்தத் தகவலும் இல்லை.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!