செய்தி விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த விரித்திமான் சஹா

இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக இருந்தவர் விருத்திமான் சஹா. அவருக்கு கடந்த சில ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கப்படாமல் இருந்தது.

அவர் மாநில அளவிலான உள்ளூர் போட்டிகளிலும், IPL தொடரிலும் மட்டுமே விளையாடி வந்தார்.

இந்த நிலையில் 2024 – 25 ரஞ்சி டிராபி தொடரில் பெங்கால் அணிக்காக ஆடி வரும் விரித்திமான் சஹா, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி தொடரே தனது கடைசி தொடராக இருக்கும் என அறிவித்து இருக்கிறார்.

விரித்திமான் சஹாவுக்கு தற்போது 40 வயது ஆகிறது. அவர் இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 3 சதம் மற்றும் 6 அரை சதம் அடித்து இருக்கிறார்.

டெஸ்ட் போட்டிகளில் 1353 ரன்கள் குவித்து இருக்கிறார். 2010 முதல் 2014 வரை 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 5 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 41 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். அவர் இந்திய டெஸ்ட் அணியின் சிறந்து விக்கெட் கீப்பராக இருந்தார் என்பதை மறுக்க முடியாது. அவர் பேட்ஸ்மேன் ஆக அதிக ரன் குவிக்கவில்லை என்ற காரணத்தால் தான் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாஹா தனது கடைசி டெஸ்ட் போட்டியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 2021 இல் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடினார்.

ஓய்வு குறித்து வெளியிட்டுள்ள பதிவில், “நேசத்திற்குரிய கிரிக்கெட் பயணத்தில் இந்த ரஞ்சி டிராபி சீசனே எனது கடைசி தொடராக இருக்கும். நான் ஓய்வு பெறுவதற்கு முன் ஒரு முறை கடைசியாக பெங்கால் அணிக்காக ஆட இருக்கிறேன். இது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த சீசனை எப்போதும் மனதில் வைத்து இருப்பேன்.” என்று பதிவிட்டிருந்தார்.

(Visited 45 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி