விராட் கோலிக்கு அபராதம்!
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் நான்காவது டெஸ்டில் சாம் கோன்ஸ்டாஸுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
அது தவிர முன்னாள் இந்திய அணித் தலைவருக்கு ஒரு குறைமதிப்பு புள்ளியும் சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தினால் வழங்கப்பட்டது.
இன்று காலை மெல்போர்னில் ஆரம்பமான நான்காவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி, அவுஸ்திரேலியாவின் 19 வயதான இளடம் வீரர் சாம் கோன்ஸ்டாஸின் தோலில் இடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
விராட் கோலி ஐசிசி விதியை மீறி தவறாக நடந்து கொண்டதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
தன் மீதான தவறை விராட் கோலி ஒப்புக்கொண்டார்.
ஐசிசி நடத்தை விதிகளில் உள்ள 2.12 என்ற விதியில் “கிரிக்கெட்டில் எந்த விதமான தகாத உடல் தொடர்பும் தடைசெய்யப்பட்டுள்ளது.
வீரர்கள் வேண்டுமென்றே, பொறுப்பற்ற முறையில் மற்றும் / அல்லது அலட்சியமாக நடந்தால், அல்லது கட்டுப்பாடுகள் இல்லாமல் மற்றொரு வீரர் அல்லது நடுவரைத் தோளினால் இடித்தால், இந்த விதிமுறைகளை மீறியதாக கருதப்படுவார்கள் என குரிப்பிடப்படுய் இருக்கிறது.