பிரித்தானியா வன்முறை சம்பவங்கள் : அச்சத்தில் புகலிடக்கோரிக்கையாளர்கள்!

புகலிடக் கோரிக்கையாளர்கள் வசிக்கும் ஹோட்டல்களைக் குறிவைப்பது கலவரம் அல்ல, இது ‘கொலை முயற்சி’ என்று அகதிகள் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தீவிர வலதுசாரி குண்டர்களின் கும்பல் லிவர்பூல், பிரிஸ்டல், லீட்ஸ், மான்செஸ்டர், பெல்ஃபாஸ்ட் மற்றும் டீசைட் ஆகிய இடங்களில் வார இறுதியில் வன்முறை ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததையடுத்து, நாடு முழுவதும் சிறுபான்மை சமூகங்கள் தங்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக புகாரளித்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை சவுத்போர்ட்டில் மூன்று இளம்பெண்கள் கொல்லப்பட்ட கொடூரமான கத்திக்குத்து சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதம் பதற்றங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 58 times, 1 visits today)