செய்தி

அதிரடியாக ஊத்தி மூடப்படும் விஜய் டிவியின் டாப் சீரியல்….

டிஆர்பி ரேட்டிங்கை தட்டி தூக்க வேண்டும் என விஜய் டிவி அதிரடியான கதைகளை கொண்ட சிறகடிக்க ஆசை, கிழக்கு வாசல் போன்ற புத்தம் புது சீரியல்களை சமீபத்தில் தொடங்கியது.

ஆனால் இப்போது ஐந்து வருடங்களாக 1300 எபிசோடை கடந்த சீரியலை அதிரடியாக ஊத்தி மூட விஜய் டிவி முடிவெடுத்துள்ளது.

இந்த காலத்திலும் கூட்டுக் குடும்பம் சாத்தியமாகும் என்பதை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலம் பார்க்க முடிகிறது. 4 நான்கு அண்ணன் தம்பிகள் தங்களது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் சேர்ந்து இந்த சீரியலில் குடும்பமாக வாழ்வது பார்ப்பதற்கே அழகாக இருக்கிறது.

ஆனால் தொடர்ந்து அரைத்த மாவையே அறைப்பது போல் ஏதாவது ஒரு தம்பி வீட்டை விட்டு வெளியேறி பின் சேர்வதை தான் தொடர் கதையாக வைத்திருக்கின்றனர்.

இதனால் முன்பு டிஆர்பி -யில் டாப் 5 லிஸ்டில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த சில மாதங்களாகவே பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இந்த சீரியலை விரைவில் நிறைவு செய்து விட வேண்டும் என விஜய் டிவி முடிவெடுத்துள்ளது.

இப்போது இந்த சீரியலில் மீனாவின் அப்பாவை கத்தியால் குத்தியதாக சொல்லி ஜீவா மற்றும் கதிர் இருவரையும் போலீஸ் கைது செய்து இருக்கிறது. ஆனால் அவர்கள் மீது எந்தத் தவறும் இல்லை, கொலையாளி பிரசாந்த் தான் என முழு குடும்பத்திற்கும் உண்மை தெரிய போகும் விறுவிறுப்பான கிளைமாக்ஸ் காட்சி இந்த வாரம் முழுவதும் ஒளிபரப்பாகும்.

மேலும் அக்டோபர் ஒன்றாம் தேதி பிக் பாஸ் சீசன் 7 துவங்கப் போவதால் தான் அவசர அவசரமாக இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கிளைமாக்ஸ் காட்சியை இந்த வாரம் ஒளிபரப்பு செய்து நாடகத்தை நிறைவு செய்யப் போகின்றனர். பிக் பாஸ் 7 முடிந்த பின்பு மறுபடியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இரண்டாம் பாகம் துவங்க திட்டமிட்டுள்ளனர்.

(Visited 7 times, 1 visits today)

MP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி