செய்தி

35 மணி நேரத்திற்கு பின்னர் நீலாங்கரை வீட்டிலிருந்து புறப்பட்ட விஜய்!

கரூரில் தவெகவின் தேர்தல் பிரச்சாரத்தில் இடம்பெற்ற விபரீதத்தின் பின்னர் விஜய் முதல் முறையாக தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்றார்.

அவர் எங்கு செல்கிறார், கரூருக்கா என்ற கேள்வியும் எழுகிறது.

கடந்த சனிக்கிழமை கரூரில் இருந்து அவசர அவசரமாக சென்னை வந்த விஜய், இரவு சரியாக 11 மணிக்கு நீலாங்கரை வீட்டிற்குள் சென்றார்.

இந்த நிலையில் தற்போது அவர் எங்கு செல்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் பட்டினம்பாக்கம் இல்லத்திற்கு அவர் புறப்பட்டு செல்லலாம் என தெரிகிறது. மேலும் கரூர் செல்ல தவெக சார்பில் அனுமதி கேட்கப்பட்டிருப்பதால் அவர் அங்கு செல்ல வாய்ப்பில்லை என தெரிகிறது.

எனவே அவர் பட்டினம்பாக்கத்தில் உள்ள அவருக்கு சொந்தமான இன்னொரு வீட்டிற்கு செல்லலாம் என சொல்லப்படுகிறது.

விஜய்யுடன் ஒய் பிரிவு பொலிஸார் இன்னொரு வாகனத்தில் செல்கிறார்கள். திருவான்மியூர் சாலையில் அவருடைய கார் பயணித்து வருகிறது என்கிறார்கள்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!