செய்தி தமிழ்நாடு

ஷட்டரை இறக்கியதுதான் விஜய் செய்த தவறு : நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி தகவல்

கரூரில் தவெக கூட்டத்தில் சிக்கி மக்கள் பலர் பலியான சம்பவத்தில் மூத்த பத்திரிகையாளர் ஒருவர், விஜய் மேல்தான் முழுக்க முழுக்க தவறு என விளக்கமளித்துள்ளார்.

குழந்தைகள், பெண்கள் என பலர் பலியாகியுள்ளனர். ஆனால் அரசியல் புரிதல் இல்லாத, வெறும் திரைப்பட மோகத்தால் கூடிய கூட்டத்தால் நடந்த கொடூர சம்பவம் இதுவென அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சம்பவம் நடந்த இடத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் தப்பியுள்ள பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவிக்கையில்,

ஒரு கூட்டத்திற்கு 2 மணி நேரம் காத்திருக்கலாம், ஆனால் 5-6 மணி நேரம் காத்திருக்க சொல்வது என்பது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளார்.

கூட்டத்தை அதிகரிக்க செய்யவே, பரப்புரையை தாமதப்படுத்துவதாகவும், இது முழுக்க முழுக்க விஜயின் தவறான செயல்பாடுகளால் நடந்த அசம்பாவிதம் என்றும் கோட்டீஸ்வரன் குறிப்பிடுகிறார்.

மட்டுமின்றி, பள்ளி, கல்லூரிகளில் சனிக்கிழமை விடுமுறை என்பதாலையே, சனிக்கிழமை மட்டும் விஜய் பரப்புரை முன்னெடுக்கிறார் என்றும் கோட்டீஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மட்டுமின்றி, அசம்பாவிதம் நடந்ததன் பின்னர், களத்தில் கட்சியினருடன் ஆறுதலாக இல்லாமல், விஜய் சென்னை திரும்பியுள்ளதும், அவரது அரசியல் முதிர்ச்சியை அம்பலப்படுத்தியுள்ளதாகவும் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும், கரூரில் கூட்ட நெரிசல், அதனால் ஏற்பட்ட மரணங்களை நேரில் கண்ட பலர் ஊடகங்களில் பேசுகையில்,

குறுகிய இடத்தில் பலர் கூடியதே இதற்கு காரணம். அதோடு பலர் அங்கேயே மயங்கி விழுந்து விட்டனர். ஆனால் அதை விஜய் பார்க்க கூட இல்லை.

இன்னும் சொல்லப்போனால் பலர் அங்கங்கே மயங்கி விழுந்த நிலையில் கிடந்தனர். அதற்கு இடையில்தான் விஜய் பேசிக்கொண்டு இருந்தார்.

இன்னும் சொல்லப்போனால் ஒரு கட்டத்தில் விஜய் தேவையின்றி தன் சீட் இருக்கைக்கு அருகில் இருக்க கூடிய கண்ணாடியை திறந்தார்.. அவர் ஷட்டரை கொஞ்சம் லேட்டாக திறந்து இருக்கலாம்.

ஆனால் தேவையின்றி முனியப்பன் கோவில் அருகிலேயே அவர் ஷட்டரை திறந்துவிட்டார். அவர் கண்ணாடியை திறந்ததை பார்த்ததும் மக்கள் ஓடி வந்தனர். அங்கிருந்தே அவர் கையசைத்தபடி வந்தார்.

அதற்கு பின் 300 – 400 மீட்டர் தாண்டி உள்ள இடத்திலதான் விஜய் பேசினார். அவர் முன்கூட்டியே கண்ணாடியை திறந்து வந்ததால் அவரை பார்க்க பலர் ஓடி வந்தனர். இதுதான் கூட்டம் நெரிசல் ஆகி, தள்ளுமுள்ளு ஏற்பட காரணமாக மாறிவிட்டது.

அவர் செய்த இந்த தவறுதான் பல மரணங்களுக்கு காரணமாக மாறிவிட்டது என்று நேரில் பார்த்த பலர் தெரிவித்து வருகின்றனர்.

 

MP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!