சர்ச்சைக்குரிய வண.ஞானசார தேரர் நாளைய தினம் விசேட அரச மன்னிப்பின் கீழ் விடுதலை? வெளியான தகவல்
பொதுபல சேனா பொதுச் செயலாளர் வண. கலபொட அத்தே ஞானசார தேரர் நாளைய தினம் விசேட அரச மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படும் கைதிகளின் பட்டியலில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது மன்னிப்பின் கீழ் அவரை விடுவிக்க முடியாது என சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா பொதுச் செயலாளர் குரகல விகாரையில் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக கலபொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகள் ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பின் கீழ் நாளைய தினம் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
சிறைச்சாலைகள் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான காமினி பீ திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 34இன் முதலாம் பிரிவில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது