மாத்தறை, பெலியத்த வீதியில் வாகன விபத்து – 20 பேர் வைத்தியசாலையில்
மாத்தறை-பெலியத்த வீதியில் ஹந்தபன்கொடெல்ல பகுதியில் டிப்பர் லாரியும் பேருந்தும் மோதியதில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் திக்வெல்ல மற்றும் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீரகெட்டிய பகுதியிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற பேருந்தும், மாத்தறையிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற டிப்பர் லொரியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





