புகைப்பட தொகுப்பு

தேசிய மட்ட பளுதூக்குதல் போட்டியில் வவுனியா மாணவிகள் சாதனை

2023ம் ஆண்டுக்கான தேசிய மட்ட பளுதூக்குதல் போட்டியில் வவுனியா மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

கண்டி பிலிமதலாவ மத்திய கல்லூரியில் இம்மாதம் 1, 2, 3 ஆகிய தினங்களில் நடைபெற்ற இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட பளு தூக்கல் போட்டியில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி கோசியா திருமேனன் 45 கிலோ எடை பிரிவில் 87 கிலோ எடை தூக்கி இரண்டாம் இடத்தையும், ஏ.கவியாழினி 80 கிலோ எடைப்பிரிவில் 65 கிலோ எடை தூக்கி நான்காம் இடத்தையும் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பாடசாலை அதிபர் சிஸ்டர் மரியடெய்சி செபமாலை மற்றும் விளையாட்டு ஆசிரியர்கள் திருமதி V.நிரஞ்சலா, திருமதி J.d.ரெஜினோல்ட், திருமதி S.அகிலா இவ் வெற்றிக்கு உதவியிருந்ததுடன் ஞானஜீவன் ஆசிரியர் இவர்களிற்கு பயிற்சியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

MP

About Author

error: Content is protected !!