வட அமெரிக்கா

அனுமதியின்றி தன்னை பெற்றெடுத்ததாக பெற்றோர் மீது வழக்கு தொடர்ந்துள்ள அமெரிக்க பெண்!

தன் அனுமதியை பெறாமலும், தன்னை தொடர்பு கொள்ளாமலும் தன்னை பெற்றெடுத்துள்ளார்கள் என்று பெற்றோர் மீது பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியைச் சேர்ந்த பெண் தியாஸ் .இவர், தன்னுடைய அனுமதியின்றி தன்னை பெற்றெடுத்ததாக பெற்றோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக தியாஸ் பேசிய வீடியோவில், “நான் இங்கு இருப்பதற்கு விரும்புகிறேனா, இல்லையா என்று நான் பிறப்பதற்கு முன்பு என்னை தொடர்பு கொண்டு கேட்டிருக்க வேண்டும்.ஆனால், என் பெற்றோர்கள் அவ்வாறு செய்யவில்லை, அதற்கு முயற்சிக்கவும் இல்லை. எனது விருப்பத்திற்கு எதிராக என்னை பெற்றெடுத்ததற்கு பெற்றோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளேன்.

என்னுடைய குழந்தைகளை நான் கருத்தரித்து பெற்றெடுக்காமல், தத்தெடுத்துள்ளேன். அவர்கள் இங்கு இருப்பது என் தவறல்ல. அவர்களை நல்ல மனிதர்களாக மாற்ற முயற்சி செய்வேன்.நீங்கள் இப்போது கர்ப்பமாக இருந்தால் மனநல மருத்துவரை சந்தித்து, குழந்தைகள் உண்மையில் இங்கே பிறக்க விரும்புகிறார்களா என்று கேட்டறிய வேண்டும்.என்னுடைய பெற்றோர்கள் அப்படி செய்யாததால் நான் வழக்கு தொடர்ந்துள்ளேன் பெற்றோருக்கு எதிராக குழந்தைகள் வழக்குத் தொடர கற்றுக்கொடுத்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!