ஆயுத விற்பனைக்கு எதிராக வடகொரியாவை எச்சரித்த அமெரிக்கா
பியோங்யாங்கிற்கும் வாஷிங்டனுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், உக்ரைனில் நடத்தும் போருக்காக ரஷ்யாவிற்கு ஆயுதங்களை விற்பதற்கு எதிராக வடகொரியாவை வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.
ரஷ்யாவிற்கும் வடகொரியாவிற்கும் இடையே சாத்தியமான ஆயுத ஒப்பந்தங்கள் குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
“ரஷ்யாவுடனான ஆயுதப் பேச்சுவார்த்தைகளை நிறுத்தவும், ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கவோ அல்லது விற்கவோ கூடாது என்று பியோங்யாங் செய்துள்ள பொது உறுதிமொழிகளுக்குக் கீழ்ப்படியும்படி DPRK யை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று வட கொரியாவை அதன் அதிகாரப்பூர்வ பெயரான கொரியாவின் ஜனநாயக மக்கள் குடியரசு என்று குறிப்பிடுகிறார் கிர்பி. .
ரஷ்யாவின் பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு, ஜூலை மாதம் வட கொரியாவுக்குச் சென்று அதன் தலைவர் கிம் ஜாங் உன்னைச் சந்தித்தபோது, மாஸ்கோவிற்கு பீரங்கி வெடிபொருட்களை விற்க பியோங்யாங்கை சமாதானப்படுத்த முயன்றதாக அமெரிக்கா நம்புவதாக கிர்பி மேலும் கூறினார்.