காதலி மற்றும் 3 குழந்தைகளை கொன்ற அமெரிக்க போர் வீரருக்கு மரண தண்டனை

தனது காதலியையும் அவரது மூன்று இளம் குழந்தைகளையும் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட வளைகுடாப் போர் வீரர் ஒருவருக்கு அமெரிக்காவின் தெற்கு மாநிலமான புளோரிடாவில் விஷ ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்ற உள்ளது.
32 வயது ரெனீ ஃப்ளாஹெர்டி மற்றும் அவரது குழந்தைகளான 9 வயது ஜெஃப்ரி, 7 ஐந்து அமண்டா , 4வயது லோகன் ஆகியோரைக் கொன்றதற்காக 62 வயதான ஜெஃப்ரி ஹட்சின்சன் மரண தண்டனை விதிக்கப்பட உள்ளார்.
1990-1991 வளைகுடாப் போரின் போது ஏற்பட்ட அனுபவங்களின் விளைவாக ஹட்சின்சன் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் கூறுகின்றனர், ஆனால் அவரது மரணதண்டனையை நிறுத்துவதற்கான மேல்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
(Visited 1 times, 1 visits today)