ட்ரம்பின் படம் பொறித்த 1 டொலர் நாணயத்தை வெளியிட திட்டமிட்டுள்ள அமெரிக்க கருவூலத்துறை
அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டொனால்ட் ட்ரம்பின் உருவப்படம் கொண்ட நாணயத்தை தயாரிப்பது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலனை செய்துள்ளது.
எதிர்வரும் 2026ஆம் ஆண்டு அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உருவம் கொண்ட ஒரு டொலர் நாணயத்தைத் தயாரிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக வெள்ளிக்கிழமை(03) அமெரிக்க கருவூலத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருவூலப் பொருளாளர் பிராண்டன் பீச் வெளியிட்ட நாணய வடிவமைப்பின் வரைவில், ட்ரம்ப் கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது படுகொலை முயற்சியில் இருந்து தப்பிய பிறகு அவர் எதிர்வினையாற்றியதை நினைவுகூரும் வகையில், நாணயத்தின் ஒரு பக்கத்தில் ட்ரம்பின் கைமுட்டியை உயர்த்தியிருக்கும் படம் “fight, fight, fight” என்ற வார்த்தைகளுடன் காட்டப்பட்டுள்ளது.
நாணயத்தின் மறுபக்கத்தில் மேலே “LIBERTY” என்ற வார்த்தையும் கீழே 1776-2026 ஆண்டுகளும் இடம்பெற்றுள்ளன.






