இஸ்ரேலுக்கு மேலும் போர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா
பல பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள குண்டுகள் மற்றும் போர் விமானங்களை இஸ்ரேலுக்கு மாற்றுவதற்கு அமெரிக்கா அங்கீகாரம் அளித்துள்ளது,
ரஃபாவில் எதிர்பார்க்கப்படும் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலைப் பற்றி அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.
எனினும் குண்டுகள் மற்றும் போர் விமானங்களை இஸ்ரேலுக்கு வழங்குவதற்கு அமேரிக்கா அங்கீகாரம் அளித்துள்ளதாக சர்வதேச ஊடங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
புதிய ஆயுதப் பொதிகளில் 1,800 MK-84 2,000lb வெடிகுண்டுகள் மற்றும் 500 MK-82 500lb வெடிகுண்டுகள் உள்ளன என்று வாஷிங்டன் போஸ்ட்டில் ஒரு அறிக்கையை உறுதிப்படுத்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது,
இஸ்ரேல் தனது தொடர்ச்சியான குண்டுவீச்சு பிரச்சாரம் மற்றும் காசாவில் தரைவழித் தாக்குதல் தொடர்பாக கடுமையான சர்வதேச விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், ஜோ பிடனின் கட்சியின் சில உறுப்பினர்கள் அமெரிக்க இராணுவ உதவியை நிறுத்துமாறு அழைப்பு விடுத்துள்ள நிலையில் இந்த தொகுப்பு வந்துள்ளது .
ஆயுத பரிமாற்றம் குறித்து கருத்து தெரிவிக்க வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது.