மேலும் 487 இந்தியர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா! தயாரான பட்டியல்
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/flight.jpg)
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார்.
முதல்கட்டமாக 15 லட்சம் வெளிநாட்டினர் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த 18,000 பேர் உள்ளனர்.
இதில் முதல் கட்டமாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களை அந்த நாட்டு அரசு ராணுவ விமானத்தில், கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில் திருப்பி அனுப்பியது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட விமானம் பஞ்சாபின் அமிர்தசரஸில் தரையிறங்கியது. விமானத்தில் வந்த 205 பேரும் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதனையடுத்து அடுத்த கட்டமாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 487 இந்தியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பட உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, விரைவில் 487 இந்தியர்கள் வெளியேற்றப்பட இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் ஆனால் தனிநபர்கள் தொடர்பான குறிப்பிட்ட தகவல்கள் இன்னும் அமெரிக்க அதிகாரிகளால் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.