பாரிய சரிவில் இருந்து மீண்டுவரும் அமெரிக்கப் பங்குச் சந்தை – மீண்டும் ஏற்றம் கண்ட பங்குகள்

பாரிய சரிவில் இருந்த அமெரிக்கப் பங்குச் சந்தையில் பங்குகள் மீண்டும் ஏற்றம் கண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வெள்ளை மாளிகை அண்மையில் அறிவித்த வரிகளைத் தற்காலிகமாய் ஒத்திவைப்பதாகத் தெரிவித்தது அதற்குக் காரணம் என நம்பப்படுகிறது.
S&P 500 குறியீடு: 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஒரே நாளில் ஆக அதிகமாக 9.5 சதவீதமாக அதிகரித்தது. Dow Jones குறியீடு: 7.8 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தது.
Nasdaq குறியீடு: 12 சதவீதத்திற்கு மேல் அதிகமாக ஏற்றம் கண்டது.
கடந்த வாரம் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்த கூடுதல் வரிகளைத் தொடர்ந்து அமெரிக்கப் பங்குகள் மோசமான சரிவைச் சந்தித்தன.
அமெரிக்காவிலும் உலக அளவிலும் பொருளாதார மந்தநிலை ஏற்படக்கூடுமென நிபுணர்கள் எச்சரித்திருந்தனர்.
(Visited 4 times, 1 visits today)