அமெரிக்கப் பங்குச்சந்தையில் வரலாற்றுச் சாதனை
அமெரிக்கப் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் 2025-ஆம் ஆண்டை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் நிறைவு செய்துள்ளனர்.
ஆண்டின் தொடக்கத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வர்த்தக வரி (Tariff) கொள்கைகளால் சந்தையில் அதிர்வுகள் ஏற்பட்ட போதிலும், ஆண்டிறுதியில் S&P 500 குறியீடு சுமார் 17 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.
குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் நிலவும் அபரிமிதமான ஆர்வம் காரணமாக முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் பெரும் லாபத்தை ஈட்டியுள்ளன.
இருப்பினும், 2026-ஆம் ஆண்டு சவால்கள் நிறைந்ததாக இருக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவலின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், புதிய தலைவராக கெவின் ஹாசெட் (Kevin Hassett) அல்லது கெவின் வார்ஷ் (Kevin Warsh) ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது வட்டி விகிதக் கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டு வரக்கூடும்.
இதேவேளை, பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் விலை இந்த ஆண்டில் 70 சதவீதம் வரை உயர்ந்துள்ள நிலையில், பிட்காயின் மற்றும் கிரிப்டோ சந்தைகள் கடுமையான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகின்றன.





