செய்தி வட அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – நேரடி விவாதத்திற்கு தயாராகும் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே விவாதம் நடைபெறுவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி விவாதம் நடத்தப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5ம் திகதி நடைபெற உள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருந்த ஜனாதிபதி ஜோ பைடனுக்கு பதிலாக துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி வேட்பாளராக வெற்றி பெற்றார்.

இதன்படி, அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு இடையிலான விவாதம் எதிர்வரும் செப்டெம்பர் 10ஆம் திகதி NBC தொலைக்காட்சி நிலையத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விவாதத்தில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஹாரிஸ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் மூன்று விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, செப்டம்பர் 4ஆம் திகதி ஃபாக்ஸ் நியூஸ் சேனலிலும், செப்டம்பர் 25ஆம் திகதி என்பிசி சேனலிலும் விவாதங்கள் நடைபெற உள்ளன.

ஆனால் இரண்டு கூடுதல் விவாதங்களில் பங்கேற்பதாக கமலா ஹாரிஸ் இன்னும் அறிவிக்கவில்லை.

எனினும், கமலா ஹாரிஸ் செப்டம்பர் 4 ஆம் திகதி விவாதத்திற்கு ஒப்புக் கொள்ளாவிட்டால், அவருடன் மீண்டும் விவாதிக்க மாட்டேன் என்று டிரம்ப் கூறினார்.

(Visited 60 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!