அமெரிக்க அதிபர் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தெற்கு காசா பகுதியில் உள்ள ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், இஸ்ரேலுக்கு ராணுவ உதவி வழங்குவது நிறுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்தில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஏவுகணைகள் மற்றும் பீரங்கி ஆயுதங்களை வழங்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன் காரணமாக ரஃபா மீது பாரிய தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம், அமெரிக்கா இஸ்ரேலுக்கு சுமார் 3,500 குண்டுகளை வழங்கியதாக ஊடக அறிக்கைகளும் வெளிவந்தன.
எவ்வாறாயினும், ஜோ பைடனின் சமீபத்திய அறிக்கை இஸ்ரேலின் இராணுவ மோதல்களை அவர் அவ்வளவாக விரும்பவில்லை என்பதையே காட்டுவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
(Visited 16 times, 1 visits today)