இலங்கைக்கு 30% வரி விதித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்

அமெரிக்காவிற்கு இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 30% வரி விதிக்கப்படும் என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஒகஸ்ட் 1 முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரிகளை அதிகரித்தால், அந்த சதவீதம் புதிதாக அறிவிக்கப்பட்ட 30% உடன் சேர்க்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேலும் கூறியுள்ளார்.
இதுவரை இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 12.2 சதவீத வரியை விதித்துள்ள நிலையில், இந்த புதிய வரி விதிப்பு நாட்டின் ஏற்றுமதித்துறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு பிரதானமாக ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் ஆடை, தேயிலை, சுவை பொருட்கள், மீன், தேங்காய் பொருட்கள், இரப்பர் பொருட்கள், அணிகலன்கள் மற்றும் கனிம கற்கள் ஆகும்.
அமெரிக்காவிற்கு இலங்கையில் இருந்தே அதிக அளவில் ஆடை ஏற்றுமதி மேற்கொள்ளப்படுவதுடன், இந்த வரி விதிப்புடன் அந்தத் துறைக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.