சீனா சமரசத்துக்கு வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் உச்சத்தை எட்டியது.
இந்த நிலையில், அமெரிக்காவின் பொருளாதார பலத்தைப் பார்த்து சீனா சமரசத்துக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது பற்றி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த செய்தித் தொடர்பாளர் கரோலின் லியவிட் சீனா உடன்படிக்கைக்கு வந்தால் ஜனாதிபதி டிரம்ப் கருணையோடு நடந்துக் கொள்வார் என்றும் சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால் அது சீனாவுக்கு நன்மையாக இருக்காது என்றும் கூறினார்.
சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா 145 சதவீதமாக உயர்த்தியதை அடுத்து சீனாவும் பதிலடியாக அமெரிக்கப் பொருட்களுக்கான வரியை 125 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
(Visited 6 times, 1 visits today)