பிலிப்பைன்ஸில் அவசரமாக தரையிறக்கப்பட்ட அமெரிக்க கடற்படை விமானம்

மணிலாவின் கிழக்கே உள்ள கியூசான் மாகாணத்திற்கு அருகிலுள்ள ஒரு சிறிய தீவில், இயந்திரக் கோளாறு காரணமாக அமெரிக்க கடற்படை விமானம் அவசரமாக தரையிறங்கியதாக உள்ளூர் போலீசார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, விமானத்தின் இயந்திரம் செயலிழந்ததாகக் கூறப்பட்டதால், சனிக்கிழமை நண்பகல் பலேசின் தீவில் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
விமானத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பாக இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
லூசான் தீவின் மேற்கு கடற்கரையில் உள்ள சுபிக் நகரில் உள்ள ஒரு இராணுவ தளத்திலிருந்து இரண்டு அமெரிக்க கடற்படை விமானங்கள், நின்றிருந்த விமானத்தை சரிசெய்ய தீவுக்கு இயந்திர வல்லுநர்களை அனுப்பி வைத்ததாக உள்ளூர் ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து அமெரிக்க தூதரகம் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை