வட அமெரிக்கா

மனைவி மற்றும் 5 குழந்தைகள் கண் முன்னே மலையிலிருந்து தவறி விழுந்து குடும்பஸ்தர் பலி!

அமெரிக்காவில் ஓரிகானின் மல்ட்னோமா நீர்வீழ்ச்சிக்கு அருகில் நடைபயணம் மேற்கொண்டபோது மனைவி மற்றும் 5 குழந்தைகள் கண் முன்னே மலையிலிருந்து தவறி விழுந்து 40 வயது நபர் உயிரிழந்துள்ளார்

இந்த சம்பவம் ஜூலை 2 ஆம் திகதி மதியம் 2 மணியளவில் ஓரிகானின் மிக உயரமான 620 அடி நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள ஒரு நடைபாதையான பென்சன் பாலத்திற்கு அருகில் நடந்துள்ளது.

ஜெரார்டோ எங்கு விழுந்தார் என்பதை கண்டுபிடிக்க முடியாததால், மீட்பு படையினரும், தீ அணைப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டனர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, மீட்பு அமைப்புகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தலைமையில் 45 நிமிட தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு, ஜெரார்டோ இறந்து கிடப்பதைக் கண்டனர்.

ஜெரார்டோ ஹெர்னாண்டஸ்-ரோட்ரிகஸின் மலையிலிருந்து தவறி விழுந்தமைக்கு மதுவே காரணம் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் மல்ட்னோமா நீர்வீழ்ச்சிக்கு ஏறக்குறைய 2 மில்லியன் மக்கள் வருகை தருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

(Visited 8 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்