இந்தியா மீது வரி விதித்த அமெரிக்கா – ரஷ்ய கச்சா எண்ணெயில் கிடைக்கும் டீசலை வாங்கும் உக்ரைன்
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறிப்பிட்டு இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்துள்ளார்.
இந்த நிலையில், அந்த கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பு செய்வதன் மூலம் கிடைக்கும் டீசலை அதிக அளவில் உக்ரைன் இறக்குமதி செய்து வருகிறது.
கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் உக்ரைனின் மொத்த டீசல் இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 15.5 சதவீதம் எனவும், தினமும் சராசரியாக 2,700 டன் டீசல் இறக்குமதி செய்யப்படுகின்றது.
உக்ரைன் எண்ணெய் சந்தை பகுப்பாய்வு நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.
2024-ஆம் ஆண்டில் 1.9 சதவீதமாக இருந்த இந்தியாவின் டீசல் ஏற்றுமதி, நடப்பு ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் 10.2 சதவீதமாக அதிகரித்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.





