வெனிசுலா ஜனாதிபதியின் உறவினர்கள் மற்றும் கூட்டாளிகள் மீது புதிய தடைகளை விதித்த அமெரிக்கா
வெனிசுலா(Venezuela) ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின்(Nicolas Maduro) குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கூட்டாளிகள் மீது அமெரிக்க கருவூலத் துறை புதிய தடைகளை அறிவித்துள்ளது.
அமெரிக்க இராணுவம் நாட்டின் கடற்கரையில் படகுகள் மீதான தாக்குதலுக்கு மத்தியில் இந்த புதிய தடைகள் வந்துள்ளன.
புதிய தடைகளை அறிவித்த அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட்(Scott Besant), “மதுரோவும் அவரது குற்றவியல் கூட்டாளிகளும் நமது நாட்டின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்துகின்றனர்” என்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
புதிய தடைகள், மதுரோவின் மருமகன் மால்பிகா புளோரஸ்(Malpica Flores), பனாமா(Panama) தொழிலதிபர் ரமோன் கரேடெரோ(Ramon Carretero) ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கூட்டாளிகளான ஏழு பேரை குறிவைக்கின்றன.





