வடகொரியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா…

உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்துவருகிறது.
இந்த சூழலில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து உக்ரைன் போருக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக அவர் இம்மாதம் ரஷ்யாவுக்கு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என வடகொரியாவுக்கு வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச சமூகத்தில் இதற்கான விலையை அவர்கள் கொடுப்பார்கள் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் செய்தியாளர்களிடம் கூறினார்.
(Visited 10 times, 1 visits today)