காஸாவுக்காக அமெரிக்கா விடுத்த கோரிக்கை
காஸாவுக்காக இஸ்ரேலிடம் அமெரிக்காவினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காஸாவுக்குள் கூடுதல் நிவாரண வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வார இறுதியில் 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் காஸாவுக்குள் அனுமதிக்கப்பட்டதை அமெரிக்கா வரவேற்றது.
நாள்தோறும் சுமார் 350 வாகனங்களை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்று வாஷிங்டன் வலியுறுத்துகிறது.
துயர் துடைப்புப் பணியாளர்களுக்குச் சிறந்த பாதுகாப்புக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டது.
சென்ற வாரம் காஸாவில் இஸ்ரேலின் ஆகாயத் தாக்குதலில் World Central Kitchen அமைப்பின் பணியாளர்கள் 7 பேர் கொல்லப்பட்டனர்.
அவர்கள் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவத்தின் விசாரணை முடிவுகளை இன்னமும் பரிசீலித்து வருவதாக வாஷிங்டன் குறிப்பிட்டுள்ளது.