அமெரிக்கா – சீனாவில் கார்களின் விற்பனையில் வீழ்ச்சி – ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த Nissan
Nissan நிறுவனம், சுமார் 9,000 ஊழியர்களை ஆட்குறைப்புச் செய்யவிருக்கிறது.
அமெரிக்காவிலும் சீனாவிலும் கார்களின் விற்பனை குறைந்த நிலையில் உலக அளவில் உற்பத்தியைக் குறைக்க அது முடிவெடுத்துள்ளது.
அதன்படி அனைத்துலக உற்பத்தி 20 சதவீதம் குறைக்கப்படும். எங்கு வேலைகள் குறைக்கப்படும் என்ற கேள்விக்கு Nissan உடனடியாகப் பதில் தரவில்லை.
இவ்வாண்டுக்கான செயல்முறை இலாப முன்னுரைப்பையும் நிறுவனம் 70 சதவீதம் குறைத்துக்கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள், நிறுவனம் சுருங்குவதாகப் பொருள்படாது என்று அதன் தலைமை நிர்வாகி Makoto Uchida கூறினார்.
Nissan, அதன் வர்த்தக நடவடிக்கைகளைச் சீரமைத்து, குறைவான ஊழியர்களோடு மீள்திறனுடன் திகழும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 5 times, 1 visits today)