பெலிஸில் சிறிய விமானத்தை கடத்திய அமெரிக்க குடிமகன் சுட்டுக்கொலை

பெலிஸில் ஒரு அமெரிக்க குடிமகன் ஒரு சிறிய ஏர் விமானத்தை கத்தி முனையில் கடத்திச் சென்று, மூன்று பயணிகளைக் காயப்படுத்தி, பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்தியவர் நாட்டிலிருந்து வெளியே செல்ல முயன்றார் என்றும், விமானத்திற்கு கூடுதல் எரிபொருள் கோரியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
உரிமம் பெற்ற துப்பாக்கியை ஏந்திச் சென்ற ஒரு பயணி அவரைச் சுட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடத்தல்காரர் அமெரிக்க குடிமகன் அகின்யேலா சாவா டெய்லர் என அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளார். விமானத்தில் டெய்லர் மற்றும் மற்றொரு அமெரிக்கர் உட்பட 14 பயணிகள் இருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
கடத்தலின் போது விமானம் சுற்றித் திரிந்த பிறகு, எரிபொருள் தீர்ந்து போகும் நிலையில், பெலிஸில் மீண்டும் தரையிறங்கியது என்று காவல்துறையை மேற்கோள் காட்டி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.