விரைவில் நேருக்கு நேர் சந்திக்கும் அமெரிக்க – சீன ஜனாதிபதிகள்
அமெரிக்க ஜனாதிபதிஜோ பைடனும் சீன ஜனாதிபதி சி சின்பிங்கும் விரைவில் நேரடியாகச் சந்திக்க அதிக வாய்ப்புள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அடுத்த மாதம் சான் பிரான்ஸிஸ்கோவில் (San Francisco) நடைபெறவுள்ள APEC உச்சநிலை மாநாட்டின்போது இரு தலைவர்களும் பேச்சு நடத்தச் சம்மதித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க, சீன அதிகாரிகள் சந்திப்பின் விவரங்களை இன்னும் முடிவுசெய்யவில்லை. இருப்பினும் வாஷிங்டனும் பெய்ச்சிங்கும் சந்திப்புக்குத் தயார் செய்வதாக மூத்த அமெரிக்க அதிகாரிகள் முன்னதாகக் கோடி காட்டியிருந்தனர்.
பைடனும் சி சின்பிங்கும் கடைசியாகச் சுமார் ஓராண்டுக்கு முன் இந்தோனேசியாவில் நடைபெற்ற G20 மாநாட்டில் சந்தித்தனர்.
அந்த நேரடிச் சந்திப்பின்போது இரு தலைவர்களும் அரசதந்திர உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்திமை குறிப்பிடத்தக்கது.