ஈராக், சிரியாவில் 85 நிலைகளை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல்!
ஈராக் மற்றும் சிரியாவில் 7 இடங்களில் 85 நிலைகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
ஜோர்டானில் அமெரிக்க ராணுவ தளத்தை குறிவைத்து நடந்த ட்ரோன் தாக்குதலில் 3 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் மற்றும் ஈரான் புரட்சிப் படைகளின் தளங்கள் மீது குண்டு வீசி தாக்கப்பட்டது.
பயங்கவாதிகள் மறைந்துள்ள இடங்களை குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இதில் 18 பேர் கொல்லப்பட்டதாக சிரியா கூறியுள்ளது.





