இரவு வானத்தை ஒளிரச் செய்யும் உர்சிட் விண்கல் மழை
உர்சிட் விண்கல் மழை, 2024-ன் கடைசி வான நிகழ்வு, டிசம்பரில் இரவு வானத்தை ஒளிரச் செய்யும். டிசம்பர் 21 மற்றும் 22 ஆம் திகதி இரவுகளில் உச்சம் அடையும் இந்த காட்சியானது வடக்கு அரைக்கோளத்தில் குளிர்கால சங்கிராந்தியுடன் சரியாக ஒத்துப்போகிறது.
உர்சிட் விண்கல் மழை ஒவ்வொரு ஆண்டும் வால்மீன் 8P/டட்டில் விட்டுச்சென்ற எச்சங்கள் வழியாக பூமி செல்லும் போது ஏற்படுகிறது.
உர்சிட் விண்கல் மழை டிசம்பர் நேற்று முதல் 26ஆம் திகதி க்கு இடையில் ஆக்டிவ் ஆக இருக்கும், அதன் உச்சம் டிசம்பர் 21 இரவு முதல் டிசம்பர் 22 அதிகாலை வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறந்த சூழ்நிலையில் – நிலவொளி இல்லாத இருண்ட வானத்தில் – நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு ஐந்து முதல் 10 விண்கற்களை பார்க்க முடியும். டிசம்பரின் ஜெமினிட்ஸ் போன்ற பிற மழைகளுடன் ஒப்பிடும்போது உர்சிட்களின் தீவிரம் குறைவாக இருந்தாலும், அவை வானியலாளர்களை ஆச்சரியப்படுத்தலாம்.
மேற்குறிப்பிட்ட தேதிகளில் வடக்கு வானத்தில் கவனம் செலுத்தி பார்ப்பது சிறந்த அனுபவம் தரும்.