பிரித்தானியர்களுக்கு உயிர் ஆபத்து தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
பிரித்தானியர்களுக்கு புயல் தாக்கம் குறித்த எச்சரிக்கைகள் அமுலில் உள்ள நிலையில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தாராக் Darragh புயல் 80 மைல் வேகத்தில் நகர்ந்துகொண்டிருப்பதாக மெட் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Darragh மேற்கிலிருந்து கிழக்கே நகர்வதால், நாடு முழுவதும் அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
560 மைல் தொலைவில் மையம் கொண்டுள்ள குறித்த புயலானது நாடு முழுவதும் பரவலான மழைவீழ்ச்சியை கொண்டுவரும் என்பதுடன், மேற்கு மிட்லாண்ட்ஸில் இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீல் ஆம்ஸ்ட்ராங் வானிலை அலுவலகத்தில் ஒரு தலைமை வானிலை ஆய்வாளர் கரையோர பகுதிகளில் காற்றானது மணிக்கு 75 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக காற்று தொடர்பான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.