பிரித்தானிய இளைஞர்களை அதிகம் பாதிக்கும் ஆபத்து – அறிகுறிகளை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
பார்கின்சன் எனப்படும் மூளை கோளாறான நடுக்குவாத நோயின் ஆரம்ப அறிகுறிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஜீப்ரா பிஞ்ச் பறவைகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.
பார்கின்சன் நோய் என்பது மூளையைப் பாதிக்கும் ஒரு நிலையாகும், இது அசைவுகள், நடுக்கம் மற்றும் விறைப்பு உள்ளிட்ட கட்டுப்படுத்த முடியாத இயக்கங்களால் சிக்கல்களை ஏற்படுத்துகிறது, இது காலப்போக்கில் மோசமாகிறது.
மூளையின் ஒரு பகுதியிலுள்ள நரம்பு செல்கள் இழப்பால் ஏற்படுகிறது, இது உலகில் வேகமாக வளர்ந்து வரும் நரம்பியல் நிலையாகும், தற்போது எந்த சிகிச்சையும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
2020 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் சுமார் 145,000 பேர் பார்கின்சன் நோயறிதலுடன் வாழ்ந்து வந்தனர்.
நடுக்கம் மற்றும் மெதுவான இயக்கம் பார்கின்சன் நோயின் முக்கிய அறிகுறிகளாக இருந்தாலும், ஒரு நபர் கண்டறியப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே ஒரு அறிகுறியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆராய்ச்சியாளர்கள் பார்கின்சன் நோய்க்கும், மரபணு மற்றும் குரல் பிரச்சினைகளுக்கு இடையே ஒரு தொடர்பைக் கண்டறிந்தனர், இது ஒரு மென்மையான சலிப்பான குரலுக்கு வழிவகுத்தது.
அரிசோனா பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரான ஜூலி இ மில்லரின் ஆய்வகத்தில் நரம்பியல் விஞ்ஞானிகளால் பறவைகள் மீது நடத்தப்பட்ட ஆய்வின்படி, குரல் அறிகுறிகள் பெரும்பாலும் மிகவும் முன்னதாகவே – சில நேரங்களில் பல தசாப்தங்களுக்கு முன்பே ஏற்படும் எனவும் அதுவே ஆரம்ப அறிகுறிகள் எனவும் கண்டுபிடித்துள்ளனர்.
பேச்சு மற்றும் மொழியைக் கையாளும் மூளை மனிதர்களைப் போலவே ஒழுங்கமைக்கப்பட்ட ஜீப்ரா பிஞ்சி பறவைகள் பற்றி ஆய்வு செய்த விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.