செய்தி

ஜெர்மனியில் தொழிற்கல்வி கற்காத மக்கள் – வெளிநாட்டு பணியாளர்களை தேடும் அரசாங்கம்

ஜெர்மனியில் தொழிற்கல்வி கற்காத நிலையில் லட்ச கணக்கான மக்கள் வாழ்ந்து வருவதாக புள்ளி விபரம் தெரிவித்துள்ளது.

ஜெர்மனி நாட்டில் 2.9 மில்லியன் மக்கள் எவ்விதமான தொழிற்கல்வியை கற்று முற்றுப்பெறாத நிலையில் உள்ளதாக புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது ஓ ஈ சி டி என்று சொல்லப்படுகின்ற அமைப்பு மேற் கொண்ட ஆய்வில் மற்றைய நாடுகளுடன் ஜெர்மனியை ஒப்பிடும் பொழுது இவ்வாறு தொழிற்கல்வியை நிறைவு செய்யாதவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஓ ஈ சி டி என்று சொல்லப்படுகின்ற இந்த அமைப்பு நாடுகளுடன் ஜெர்மனியை ஒப்பிடும் பொழுது பல்கலைகழக கல்வியை முடித்தவர்களுடைய எண்ணிக்கையை இந்த நாட்டுடன் ஒப்பிடும் பொழுது ஜெர்மனியில் குறைவாக உள்ளதாகவும் இந்த அமைப்பு தெரிவித்து இருக்கின்றது.

இந்நிலையானது தொடர்ந்து நீடிக்கப்படுமானால் ஜெர்மனியில் ஏற்கனவே பயிற்றப்பட்ட தொழிலாளர்களின் பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில் மேலதிகமாக இவ்வாறு பயிற்றப்பட்ட தொழிலாளர்களை வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு அமர்த்தும் ஒரு நிர்பந்தம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஜெர்மனி அரசாங்கமானது இந்த விடயத்தில் கூடுதலான அக்கறை எடுக்க வேண்டும் என்று சில அமைப்புக்கள் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் வெளிநாட்டுகளில் இருந்து ஜெர்மனியில் குடியேறியவர்கள் குறிப்பாக வெளிநாட்டுபுலம்பெயர்ந்த அமைப்பை சேர்ந்த இளைஞர் யுவதிகள் தொழிற் கல்வியை முற்றுப்பெறாத நிலையில் உள்ளதாகவும் புள்ளி விபரம் சுட்டிக்காட்டியுள்ளது.

(Visited 25 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி