திருமணமாகாத பெண்களும் குழந்தை பெறலாம்; சீனாவின் அதிரடி அறிவிப்பு!
சீனாவில் திருமணம் ஆகாத பெண்களும் இனி குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
அந்த வகையில் மகப்பேறு விடுப்புக்கான ஊதியம், புதுமண தம்பதிகளுக்கு சம்பளத்துடன் கூடிய 30 நாள் விடுப்பு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இளைஞர்கள் காதலிக்க நேரம் ஒதுக்கும் வகையில் கல்லூரிகள் விடுமுறையை அறிவித்துள்ளன.இருப்பினும், குழந்தை பராமரிப்பு செலவு, கல்வி செலவு, விலைவாசி ஏற்றம் உள்ளிட்ட காரணங்கள் சீனர்கள் குழந்தைப் பெற்றுக் கொள்ள தடையாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன்போது திருமணமாகாத பெண்கள், ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பை எடுத்துக்கொண்டு செயற்கை கருவுற்றல் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)