இங்கிலாந்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் பல்கலைக்கழக மாணவர்கள்!

இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்களுக்கான அலுவலகம் (OfS) தனது கணக்கெடுப்பில் 14% சதவீதமான மாணவர்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானதாக தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதில் கற்பழிப்பு, கற்பழிப்பு முயற்சி மற்றும் தேவையற்ற தொடுதல் ஆகியவையும் அடங்கும். பதிலளித்த நான்கு மாணவர்களில் ஒருவர் பாலியல் துன்புறுத்தலை அனுபவித்ததாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பதிலளித்த மாணவர்களில் 1.5 சதவீதமானோர் சிலருடன் நெருங்கிய உறவில் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
பெண்கள் மற்றும், ஓரினச்சேர்க்கையில் இருப்போர் அதிகளவிலான துன்புறுத்தல்களை எதிர்கொண்டிருக்கலாம் என அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள அனைத்து இறுதியாண்டு இளங்கலை மாணவர்களும் இந்த கணக்கெடுப்பை நிரப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அதன்படி 52000 பேர் பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.