இலங்கை

பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் பல்கலைக்கழகங்கள்!

சம்பளப் பிரச்சினை, அரச பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதி வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராக 17 பல்கலைக்கழகங்களும் இணைந்து நாளை (02.11) பாரிய அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.

நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் அரச சேவை தொழிற்சங்கங்களின் ஒன்றியமும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து இன்று நடத்திய கலந்துரையாடலில் இது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசாங்கத்தின் வருமான வரி உள்ளிட்ட வரிக் கொள்கை நியாயமற்றது மற்றும் தன்னிச்சையானது என தொழிற்சங்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பு லோட்டஸ் வீதியில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் இலங்கை வங்கி ஊழியர் சங்கம் உட்பட பல தொழிற்சங்கங்கள் இதில் இணைந்துகொண்டன.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்