பால்டிக் கடலுக்கு மேலே அடையாளம் தெரியாமல் பறந்த ரஷ்ய விமானம்!
ரஷ்யா அண்மைக்காலமாக பிற நாடுகளின் வான்பரப்பில் ஊடுருவி வருகின்றது. இது சர்வதேச ரீதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பால்டிக் கடலுக்கு மேலே அடையாளம் தெரியாத வகையில் ரஷ்யாவின் கண்காணிப்பு விமானம் ஒன்று பறந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து விரைந்து செயற்பட்ட ஜெர்மனி மற்றும் ஸ்வீடனைச் சேர்ந்த விமானப்படை போர் விமானங்கள் அதனை இடைமறிக்கும் பணியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்ய IL-20 உளவு விமானத்தைக் கண்காணிக்கவும் புகைப்படம் எடுக்கவும் சர்வதேச வான்வெளியில் இரண்டு ஸ்வீடிஷ் கிரிபன் ஜெட் விமானங்களும் இரண்டு ஜெர்மன் யூரோஃபைட்டர் ஜெட் விமானங்கள் நிலை நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் ரஷ்யாவின் நடவடிக்கை தொடர்பில் கவனமுடன் செயற்படுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





