ஐரோப்பா

இஸ்ரேல்-காஸா போர் நிறுத்தத் திட்டத்துக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஆதரவு

அமெரிக்கா பரிந்துரைத்துள்ள இஸ்ரேல்-காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய நாட்டு சபையின் பாதுகாப்பு கவுன்சில் வாக்களித்துள்ளது.

முழுமையாகப் போரை நிறுத்துவது, ஹமாஸ் வைத்திருக்கும் பிணைக்கைதிகளை விடுவிப்பது, உயிரிழந்த பிணைக்கைதிகளின் உடல்களைத் திரும்பத் தருவது உள்ளிட்டவற்றுக்கான நிபந்தனைகளை அமெரிக்காவின் போர் நிறுத்தப் பரிந்துரை கொண்டுள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலிலன்ன் 15 உறுப்பினர்களில் 14 பேர் அதற்குச் சாதகமாக வாக்களித்தனர். ர‌ஷ்யா வாக்களிக்கவில்லை.

இஸ்ரேல் அந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கான பரிந்துரையை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஹமாஸ் அமைப்பும் அதை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மூன்று அங்கங்கள் கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தப் பரிந்துரையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த மே மாதம் 31ஆம் திகதியன்று வெளியிட்டார். அதற்கு ஜி7 கூட்டமைப்பு உறுப்பு நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகளின் அரசாங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன.இப்போது ஐநா பாதுகாப்பு கவுன்சிலும் அவற்றுடன் சேர்ந்துள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமையன்று (ஜூன் 10) கொந்தளிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் பழமைவாதக் கொள்கைகளைப் பின்பற்றும் மாணவர்களைக் கட்டாய தேசிய சேவை மேற்கொள்ள வைக்கும் மசோதாவை சட்டமாக்கும் முயற்சியில் இஸ்ரேல் இறங்கியதையடுத்து இந்நிலை உருவானது. மசோதா நடைமுறைப்படுத்தப்பட்டால் அது மிகவும் பழமைவாதக் கொள்கைகளைப் பின்பற்றும் யூதர்களை ராணுவத்தில் சேர்க்க வழிவகுக்கும்.பழமைவாத யூதர்கள் பொதுவாக ராணுவத்தில் சேர்வதைத் தவிர்த்து வந்துள்ளனர்.

ராணுவ சேர்க்கை மசோதாவை சட்டமாக்க அது நாடாளுமன்றத்தில் இன்னும் பல கட்டங்களைத் தாண்ட வேண்டும். மிகவும் பழமைவாதக் கொள்கைகளைப் பின்பற்றுவோரை ராணுவத்தில் சேர்த்துக்கொள்வதற்கு இஸ்ரேலில் பல ஆண்டு காலமாக மாறுபட்ட கருத்துகள் இருந்து வந்துள்ளன. பலரை உள்ளடக்கும் ராணுவ சேவை, இஸ்ரேலின் பாதுகாப்புக்கான முக்கிய அம்சங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

சமய சார்பற்ற இஸ்ரேலியர்கள் பலர் ராணுவத்தில் சேர்வதை விரும்புவதில்லை. எனினும், குறைந்தது 600 இஸ்ரேலிய ராணுவ வீரர்களைப் பலிவாங்கிய காஸா போர் தொடங்கியதிலிருந்து இந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பும் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

(Visited 9 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்