வீட்டுப் பணிப்பெண்ணை அடிமையாக வைத்திருந்த ஐ.நா நீதிபதிக்கு சிறைத்தண்டனை

வீட்டுப் பணிப்பெண்ணை அடிமையாக வேலை செய்ய கட்டாயப்படுத்தியதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் நீதிபதி ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
லிடியா முகாம்பே, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முனைவர் பட்டம் படித்துக்கொண்டிருந்தபோது, அவரது வீட்டில் ஒரு இளம் பெண் பணிப்பெண்ணாக ஊதியம் பெறாமல் வேலை செய்து வருவதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
உகாண்டாவில் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் இருக்கும் 50 வயதான அவர், மார்ச் மாதம் நவீன கால அடிமைத்தனக் குற்றங்களுக்காக குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
ஆக்ஸ்போர்டு கிரவுன் நீதிமன்றத்தில் அவருக்கு ஆறு ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
உகாண்டாவைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு முகாம்பே மோசடியாக விசா ஏற்பாடு செய்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)