இங்கிலாந்தின் ருவாண்டா திட்டம்: 600 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் செலவு
ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய திட்டமானது 300 அகதிகளை நாடு கடத்த 600 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் செலவாகும் என பாராளுமன்றத்தின் செலவின கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் சட்டரீதியான சவால்கள் காரணமாக இதுவரை யாரும் நாடு கடத்தப்படவில்லை.
பிரிட்டன் ஏற்கனவே ருவாண்டாவிற்கு செலுத்திய 220 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல், அடுத்த மூன்று ஆண்டுகளில் கூடுதலாக 150 மில்லியன் பவுண்டுகள் செலுத்த அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது
பிரித்தானிய அரசாங்கம் ருவாண்டாவிற்கு மேலும் 150,874 பவுண்டுகளை மீள்குடியேற்றப்பட்ட ஒவ்வொருவருக்கும் செலவழிக்க வேண்டும் என்று செலவின கண்காணிப்பு அமைப்பு இதுவரை கொள்கையின் மிக விரிவான நிதி மதிப்பீட்டில் தெரிவித்துள்ளது.
விமானங்கள் போன்ற பிற செலவுகளை கணக்கில் எடுத்துக் கொண்டால், பாலிசி 600 மில்லியன் பவுண்டுகளுக்கு ($760 மில்லியன்) அதிகமாக வரும்.
இறுதியில், கிழக்கு ஆபிரிக்க நாட்டிற்கு ஆயிரக்கணக்கான மக்களை அனுப்ப அரசாங்கம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.