2 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்ய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட உக்ரைன் காவலர்
இரண்டு வருடங்களுக்கு பிறகு ரஷ்ய சிறையிலிருந்து,இருபத்தி நான்கு வயதான மரியானா செச்செலியுக் கிய்வ் மற்றும் மாஸ்கோ இடையே போர்க் கைதிகள் (POW) பரிமாற்றத்தின் போது விடுவிக்கப்பட்டதாக உக்ரைன்ஸ்கா பிராவ்டா தெரிவித்துள்ளது.
மேலும் அவளுடன் மேலும் எழுபத்து நான்கு போர்க் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
உக்ரைனின் தேசிய காவல்துறையின் புலனாய்வாளரான திருமதி செச்செலியுக், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைபிடிக்கப்பட்டார்.
உக்ரைன் நாட்டுக் கொடியால் போர்த்தப்பட்ட மலர்க்கொத்து வழங்கி மக்களால் கட்டித்தழுவி கண்ணீர் வரவேற்றப்பட்டார்.
திருமதி செச்செலியுக்கின் குடும்பத்தினர், அவர் சொல்ல முடியாத கஷ்டங்களை அனுபவித்ததாகவும், சிறைபிடிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும் தெரிவித்தனர்.
“அவள் கணிசமான அளவு எடையை இழந்தாள், அவளது நோயெதிர்ப்பு அமைப்பு பலவீனமடைந்தது, அவளுடைய தலைமுடி உதிர ஆரம்பித்தது, அவள் அமினோரியாவால் அவதிப்பட்டாள்,” என்று தாயார் நடாலியா தெரிவித்தார்.
அந்த பெண் பின்னர் உக்ரைன்ஸ்கா பிராவ்தாவிடம், தனது மகள் “பட்டினியால் வாடி, அடிக்கப்பட்டாள், மற்ற வகை துஷ்பிரயோகங்களுக்கு ஆளாக்கப்பட்டாள்” என்று குறிப்பிட்டார்.
ஏப்ரல் 2022 இல் அசோவ்ஸ்டல் ஸ்டீல்வொர்க்ஸ் ஆலையில் ரஷ்ய குண்டுவெடிப்புகளிலிருந்து மறைந்திருந்தபோது திருமதி செச்செலியுக் மற்றும் அவரது சகோதரி இருவரும் சிறைபிடிக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தது.