இருளில் மூழ்கிய உக்ரைன் நகரங்கள் – இரவு முழுவதும் பதற்றத்தில் போலந்து!
 
																																		ரஷ்யா 650 ட்ரோன்கள் மற்றும் 50 ஏவுகணைகளை கொண்டு உக்ரைன் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் சபோர்ஜியாவில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு குழந்தைகள் உட்பட குறைந்தது 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அத்துடன் நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சில ஏவுகணைகள் போலந்தின் எல்லையை தாண்டிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நாட்டை தற்காத்துக்கொள்ள போலந்தும் போர் விமானங்களை அனுப்பியுள்ளது.
கின்சல் வான்வழி ஏவுகணைகள் Kinzhal air-launched missiles, பாலிஸ்டிக் வெடிக்கும் ஆயுதங்கள் ballistic explosive weapons, Kh-101 கப்பல் ஏவுகணைகள் மற்றும் கொலையாளி “காமிகேஸ்” ஷாஹெட் ட்ரோன்கள் “kamikaze” Shahed drones ஆகியவை ஏவப்பட்டுள்ளதாக தி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைன் முழுவதும் எச்சரிக்க அலாரம் ஒலித்ததுடன், கிட்டத்தட்ட அனைத்து பிராந்தியங்களிலும் வான் பாதுகாப்பு செயல்படுத்தப்பட்டது.
சபோரிஜியா பகுதி குறைந்தது 20 ட்ரோன்கள் மற்றும் எட்டு ஏவுகணைகளிலிருந்து பல மணிநேர தொடர்ச்சியான தாக்குதல்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
        



 
                         
                            
