ஈரானின் 35 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்!
உக்ரைனில் இன்று காலை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஐந்துபேர் காயமைடைந்துள்ளதுடன், இரண்டு அடுக்குமாடி கட்டிடம் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நகரின் வான் பாதுகாப்பு பகுதியில் ஈரானில் தயாரிக்கப்பட்ட 35 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நகர மேயர், “எல்லாம் எப்போது முடிவடையும்? மிக மோசமான விஷயம் என்னவென்றால், நாங்கள் ஏற்கனவே அதனுடன் வாழ கற்றுக்கொண்டோம் எனத் தெரிவித்துள்ளார்.
“ஒலிகள் பயங்கரமாக இருந்தன, முழு நேரத்திலும் நான் அப்படி ஒரு விஷயத்தை கேட்டதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





